Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் உதவியாளர்கள் அரசுக்கு செலவு அதிகரிக்கும்

வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் உதவியாளர்கள் அரசுக்கு செலவு அதிகரிக்கும்

வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் உதவியாளர்கள் அரசுக்கு செலவு அதிகரிக்கும்

வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதல் உதவியாளர்கள் அரசுக்கு செலவு அதிகரிக்கும்

ADDED : செப் 24, 2025 02:41 AM


Google News
சிவகங்கை:தமிழகத்தில் வி.ஏ.ஓ.,க்களுக்கு கூடுதலாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் ஆர்.போஸ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் 2299 கிராம உதவியாளர்களை நியமிக்க அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இப்பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி, பிற்பட்ட, மிக பிற்பட்டோர் என சில பிரிவினருக்கு வயதுவரம்பை உயர்த்தியதை வரவேற்கிறோம்.

தற்போது ஒரு வி.ஏ.ஓ.,விற்கு ஒரு கிராம உதவியாளர் என்றிருக்கும் நிலை மாறி கிராம கணக்கிற்கு (குரூப்) ஒரு கிராம உதவியாளர் என கணக்கிட்டு வி.ஏ.ஓ.,விற்கு 4 முதல் 9 கிராம உதவியாளர் வரை நியமித்து வருகின்றனர். கிராமங்களில் வி.ஏ.ஓ.,க்கு ஒருவர் வீதமும், நகரங்களில் வி.ஏ.ஓ.,விற்கு 2 பேர் வீதம் கிராம உதவியாளரை நியமிக்கலாம். அதற்கு மேல் ஒரே வி.ஏ.ஓ.,விற்கு பல கிராம உதவியாளர்களை நியமிப்பது தவறான வழிமுறைகளுக்கு வித்திடுவதோடு, அரசுக்கும் கூடுதல் செலவினம் ஏற்படுத்தும். குறிப்பாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் ஒரு வி.ஏ.ஓ.,விற்கு 4 முதல் 9 கிராம உதவியாளர்கள் வரை நியமிக்கின்றனர். இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும் என வருவாய்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் அமுதாவிடம் வலியுறுத்தியுள்ளோம். என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us