/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கச்சாத்தநல்லுாரில் குடிநீர் திட்ட உறை கிணறு பாதிப்பு இல்லாமல் திட்டம் நிறைவேற்றப்படும் கோட்டாட்சியர் உறுதி கச்சாத்தநல்லுாரில் குடிநீர் திட்ட உறை கிணறு பாதிப்பு இல்லாமல் திட்டம் நிறைவேற்றப்படும் கோட்டாட்சியர் உறுதி
கச்சாத்தநல்லுாரில் குடிநீர் திட்ட உறை கிணறு பாதிப்பு இல்லாமல் திட்டம் நிறைவேற்றப்படும் கோட்டாட்சியர் உறுதி
கச்சாத்தநல்லுாரில் குடிநீர் திட்ட உறை கிணறு பாதிப்பு இல்லாமல் திட்டம் நிறைவேற்றப்படும் கோட்டாட்சியர் உறுதி
கச்சாத்தநல்லுாரில் குடிநீர் திட்ட உறை கிணறு பாதிப்பு இல்லாமல் திட்டம் நிறைவேற்றப்படும் கோட்டாட்சியர் உறுதி
ADDED : செப் 25, 2025 05:08 AM

இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லுார் வைகை ஆற்றில் இளையான்குடி பேரூராட்சி குடிநீர் திட்டத்திற்கு உறை கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் முறையீடு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற சமாதான கூட்டத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆய்வு செய்து குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா தெரிவித்தார்.
இளையான்குடி பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்ட பணிக்காக கச்சாத்தநல்லுார் வைகை ஆற்றுப்பகுதியில் உறை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இப்பகுதியில் உறை கிணறு அமைத்தால் விவசாயத்திற்கும்,குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தச்சத்தநல்லுார் கிராம வைகை ஆற்றுப்பகுதியில் முற்றுகை போராட்டமும் நடத்தினர்.
இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் தலைமையில் செயல் அலுவலர் அன்னலட்சுமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டர் பொற்கொடியை சந்தித்து புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.நேற்று காலை 10:30 மணிக்கு கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, இளையான்குடி தாசில்தார் முருகன்,பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் உறை கிணறுகள் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வந்த போது கிராம மக்கள் இங்கு அமைக்க கூடாது என முறையிட்டனர்.
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் உறை கிணறுகள் அமைப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.