ADDED : செப் 25, 2025 05:08 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட கிரிக்கெட்,தேக்வாண்டோ அணிக்கு தேர்வு பெற்றனர்.
சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடந்தன. அதில் ஆ.பி.அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் விளையாடியது. 58 அணிகள் பங்கேற்றதில் மூன்றாமிடத்தை இப்பள்ளி வென்றது. மாணவர்கள் எஸ்.கனிஷ்கர், எஸ்.ஜெனக்ஷன் மாநில கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்த வி.தருண் என்ற மாணவன் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். உடற்கல்வி பொறுப்பாசிரியர்கள் பாண்டியன், வெங்கட்ராகவன் ஆகியோரை தலைமையாசிரியர் பாரதிதாசன்,ஆசிரியர்கள் பாராட்டினர்.