ADDED : ஜூன் 11, 2025 07:38 AM
தேவகோட்டை : மயிலாடுதுறை மாவட்டம், எருக்கச்சேரி துரை 60. இவர் தேவகோட்டை ராம்நகரில் சிமிண்ட் கிராதிகள் செய்யும் தொழில் செய்தார். நேற்று முன்தினம் மாலை டூவீலரில் கடைக்கு சென்றார்.
அப்போது காரைக்குடி தனியார் பள்ளி பஸ், டூவீலரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காயமுற்ற துரையை தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
தேவகோட்டை போலீசார் பஸ் டிரைவர் காரைக்குடியை சேர்ந்த விக்னேஷ் 30, என்பவரை கைது செய்தனர்.