/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி அரசு பள்ளியில் கலைப்பிரிவு நீக்கம் மாணவிகள் தவிப்பு காரைக்குடி அரசு பள்ளியில் கலைப்பிரிவு நீக்கம் மாணவிகள் தவிப்பு
காரைக்குடி அரசு பள்ளியில் கலைப்பிரிவு நீக்கம் மாணவிகள் தவிப்பு
காரைக்குடி அரசு பள்ளியில் கலைப்பிரிவு நீக்கம் மாணவிகள் தவிப்பு
காரைக்குடி அரசு பள்ளியில் கலைப்பிரிவு நீக்கம் மாணவிகள் தவிப்பு
ADDED : ஜூன் 11, 2025 07:37 AM
காரைக்குடி: காரைக்குடி முத்துப்பட்டிணம் அரசு மகளிர் பள்ளியில் கலைப் பிரிவு நீக்கப்பட்டதால், பிளஸ் 1 சேர முடியாமல் மாணவிகள் தவித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிளஸ் 1, 2 ல் கலைப்பிரிவு பாடங்கள் இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில் இருந்து இங்கு செயல்பட்ட கலைப் பிரிவு நீக்கப்பட்டது. இதனால், தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள், பிளஸ் 1 கலைப்பிரிவில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவிகள் பிற பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் காலிப்பணியிடம் இருப்பதால், கலைப்பிரிவு பாட வகுப்புகள் நடத்த முடியவில்லை. எனவே அரசு பள்ளியில் தொடர்ந்து கலைப்பிரிவு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து தலைமை ஆசிரியை பாலதிரிபுரசுந்தரி கூறியதாவது, ஆசிரியர் காலிபணியிடத்தால் அப்பிரிவு நீக்கப்பட்டுள்ளன. மாணவிகள் வேறு பள்ளிகளுக்கு சென்று சேர்கின்றனர், என்றார்.