/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புதிய ரோட்டின் நடுவில் மின்கம்பம்: மக்கள் அதிருப்தி புதிய ரோட்டின் நடுவில் மின்கம்பம்: மக்கள் அதிருப்தி
புதிய ரோட்டின் நடுவில் மின்கம்பம்: மக்கள் அதிருப்தி
புதிய ரோட்டின் நடுவில் மின்கம்பம்: மக்கள் அதிருப்தி
புதிய ரோட்டின் நடுவில் மின்கம்பம்: மக்கள் அதிருப்தி
ADDED : செப் 24, 2025 08:38 AM
மானாமதுரை : மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றாமல் சிமென்ட் ரோடு போடப்பட்டதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளிலும் புதிதாக சிமென்ட் மற்றும் தார் ரோடு பல கோடி செலவில் போடப்பட்டு வருகின்றன. கன்னார் தெரு மருதாநகர் ஆற்றுக்குப் செல்லும் சந்தில் ரோட்டின் நடுவே சேதமடைந்த இரும்பு மின் கம்பத்தில் ஏராளமான மின் இணைப்புகள் உள்ள நிலையில் ரோடு அமைப்பதற்கு முன் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.
நேற்று மின் கம்பத்தை மாற்றாமல் சிமென்ட் ரோடு போடப்பட்டதால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.