/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம் சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
சிவகங்கை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : செப் 24, 2025 08:37 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் கோயில்களில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது. கொலு அலங்காரத்தை பக்தர்கள் ஆர்வமாக பார்வையிட்டனர்.
பூமாயி அம்மன் கோயிலில் 34 ஆண்டுகளாக நவராத்திரி விழா நடத்தப்படுகிறது. நேற்று மாலை 6:00 மணிக்கு மூலவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொலு மண்டபத்தில் அலங்காரத்தில் உற்ஸவ அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. இன்று முதல் தினசரி மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறும். அக்.2 இரவு 8:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழந்தருளி அம்பு எய்தல் நடைபெறும்.
*திருத்தளிநாதர் கோயிலில் நேற்று திருநாள் மண்டபத்தில் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசித்தனர்.கொலு மண்டபத்தில் மாலையில் உற்ஸவ அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி இரவு 7:45 மணி அளவில் தீபாராதனை நடந்தது. அக்.2 மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளிஅம்பு எய்தல், திருவீதி உலா நடைபெறும்.
*நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் நேற்று மாலை துவங்கியது. மகாலெட்சுமி உற்ஸவர் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது.
*ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் செப்.21 ல் காப்புக்கட்டி நவராத்திரி விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி உற்ஸவ அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.