/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஜி.எஸ்.டி., வரிச்சலுகை சாமானிய மக்களுக்கும் சேர வேண்டும் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் ஜி.எஸ்.டி., வரிச்சலுகை சாமானிய மக்களுக்கும் சேர வேண்டும் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., வரிச்சலுகை சாமானிய மக்களுக்கும் சேர வேண்டும் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., வரிச்சலுகை சாமானிய மக்களுக்கும் சேர வேண்டும் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., வரிச்சலுகை சாமானிய மக்களுக்கும் சேர வேண்டும் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2025 02:38 AM

சிவகங்கை,:ஜி.எஸ்.டி., வரிச்சலுகை, சாமானிய மக்களையும் சென்று சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சிவகங்கையில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொது செயலாளர் கே.சுவாமிநாதன் கூறினார்.
அவர் கூறியதாவது: இன்சூரன்ஸ் பிரீமியங்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு நீக்கியதை வரவேற்கிறோம். கடந்த 8 ஆண்டாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர், எல்.ஐ.சி., ஏஜன்ட், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் இணைந்து வைத்த கோரிக்கையை மத்திய அரசு தற்போது நிறைவேற்றி தந்துள்ளது.
எல்.ஐ.சி.,அரசு நிறுவனமாகவே தொடர வேண்டும். இதன் 3.5 சதவீத பங்குகளை ஏற்கனவே விற்று விட்டனர்.
இதற்கு அடுத்தகட்டமாக பங்குகள் விற்பனையை நோக்கி செல்லும் நிலை உள்ளது.
நாட்டில் 25 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளன. ஒட்டு மொத்த இன்சூரன்ஸ் பாலிசிகளில் எல்.ஐ.சி., முதலிடத்தில் உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கவோ, உயர்த்தவோ கூடாது.
ஏற்கனவே 74 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத அந்நிய முதலீட்டை நவ.,ல் நடக்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது, உகந்தது அல்ல. இம்முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்.
கார்ப்பரேட் வரிகளை உயர்த்துவதோடு, செல்வ வரிகளையும் விதிக்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள ஜி.எஸ்.டி., 2.0 வரி சலுகைகள் சாமானிய மக்களுக்கு போய் சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
சிறுதொழில்கள், மக்கள் நல திட்டங்கள் பாதிக்கப்படக்கூடாது. இதை மக்களிடம் பிரசாரமாக எடுத்து செல்ல உள்ளோம் என்றார்.