/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து போராட்டம் உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து போராட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து போராட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து போராட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து போராட்டம்
ADDED : செப் 26, 2025 02:12 AM
சிவகங்கை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி சிவகங்கை மாவட்ட வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில் கலெக்டர், தாசில்தார் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
வருவாய்துறையில் பணிபுரியும் தாசில்தார், துணை தாசில்தார், ஆர்.ஐ., நில அளவை பிரிவு அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினர். முகாம் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
மனுக்களை தீர்வு செய்ய 90 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என சங்கத்தினர் வைத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதையடுத்து நேற்று சிவகங்கை கலெக்டர், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மாரி தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் வளனரசு வரவேற்றார்.
மாவட்ட நிதி காப்பாளர் அசோக்குமார் கோரிக்கை விளக்கி பேசினார். காளையார்கோவிலில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகேந்திரன், பெரியசாமி, சிங்கம்புணரியில் கார்த்தி, இளையான்குடியில் ராஜமார்த்தாண்டன் பங்கேற்றனர்.