ADDED : ஜூன் 12, 2025 02:07 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீசிய சூறைக்காற்றால் இன்டர்நெட் டவர் சாய்ந்தது.
சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுத்த நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. காற்று பலமாக வீசியதால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன, வீட்டுக்கூரைகள் பறந்தன. சிங்கம்புணரி கடைவீதியில் பள்ளிவாசல் அருகே உள்ள லாட்ஜ் கட்டடத்தின் மேல் பொருத்தியிருந்த 30 அடி உயர இன்டர்நெட் டவர் சாய்ந்தது.