ADDED : ஜூன் 12, 2025 02:07 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே பூம்பிடாகை விலக்கில் கட்டுப்பாட்டை இழந்து அரசு டவுன் பஸ் கவிழ்ந்து, சேதமானது. இதில், பஸ்சில் பயணித்த 6 பேர் காயமுற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருப்புவனம் வழியாக தச்சனேந்தல் நோக்கி டவுன் பஸ் சென்றது.பஸ்சை தற்காலிக டிரைவர் லட்சுமணன் 28, ஓட்டினார். கதிரேசன் 56, கண்டக்டராக இருந்தார். இந்த பஸ்சில் 20 பயணிகள் மதுரையில் இருந்து பயணித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 9:40 மணிக்கு பூம்பிடாகை விலக்கு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த கருப்பு 54, ரஞ்சிதம் 47, இருளாயி 50, ராஜா 40, ராஜலட்சுமி 55, கண்டக்டர் கதிரேசன் ஆகியோர் காயமுற்றனர். பழையனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.