ADDED : செப் 26, 2025 02:11 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.மாம்பட்டி ஊராட்சி தும்பைபட்டியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது.
இக்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எஸ்.மாம்பட்டி, சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அங்கு ஏற்கனவே கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கல்குவாரியால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்து, காற்றுமாசு ஏற்படும் எனவும்,குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.