/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நீர் மேலாண்மையில் அசத்தும் எஸ்.புதுார் விவசாயிகள் நீர் மேலாண்மையில் அசத்தும் எஸ்.புதுார் விவசாயிகள்
நீர் மேலாண்மையில் அசத்தும் எஸ்.புதுார் விவசாயிகள்
நீர் மேலாண்மையில் அசத்தும் எஸ்.புதுார் விவசாயிகள்
நீர் மேலாண்மையில் அசத்தும் எஸ்.புதுார் விவசாயிகள்
ADDED : செப் 26, 2025 02:11 AM

எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் போர்வெல் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மையில் விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.
மலைக்குன்று நிறைந்த இவ்வொன்றியத்தில் சில இடங்களில் நிலத்தடி நீர் குறைவாகவே உள்ளது. இதனால் போர்வெல்லில் சிறிது நேரம் மட்டுமே தண்ணீர் வரும். குறைவாக வரும் தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில் சில வருடங்களாக இப்பகுதி விவசாயிகள் தார்பாய் மூலம் குட்டை அமைத்து அதில் தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் குறைந்த அளவு தண்ணீர் வந்தாலும் அதை தொட்டியில் சேமித்து, பிறகு பயிர்களுக்கு பாய்ச்சும் போது தண்ணீர் மிச்சமாவதுடன் பயிர்களும் செழித்து வளர்கிறது.
விவசாயிகள் தெரிவித்ததாவது: இவ்வொன்றியத்தில் சில இடங்களில் நிலத்தடி நீர் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தார்ப்பாய் தொட்டி அமைத்து தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். ஒரு ஏக்கருக்கு ஒரு இன்ச் தண்ணீர் வரும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் 34,000 லிட்டர் தேக்கி பயன்படுத்தப்படுகிறது. இதுவே நேரடியாக பாய்ச்சும் போது இரண்டு மடங்கு தண்ணீர் வீணாகிறது. இந்த முறையால் தண்ணீர் சிக்கனமும் பயிர் வளர்ச்சியும் அதிகம் கிடைக்கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் குட்டை அமைக்க 100 சதவீத மானியத்தில் தார்ப்பாய்களை அரசு வழங்க வேண்டும், என்றனர்.