/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ சிறுமிக்கு கல்லீரல் நீர்க்கட்டி தஞ்சை ஜி.எச்.,சில் அகற்றம் சிறுமிக்கு கல்லீரல் நீர்க்கட்டி தஞ்சை ஜி.எச்.,சில் அகற்றம்
சிறுமிக்கு கல்லீரல் நீர்க்கட்டி தஞ்சை ஜி.எச்.,சில் அகற்றம்
சிறுமிக்கு கல்லீரல் நீர்க்கட்டி தஞ்சை ஜி.எச்.,சில் அகற்றம்
சிறுமிக்கு கல்லீரல் நீர்க்கட்டி தஞ்சை ஜி.எச்.,சில் அகற்றம்
ADDED : மார் 26, 2025 01:34 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சேதுராயன்குடிகாடை சேர்ந்த தம்பதியின் 6 வயது பெண் குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. சிறுமியை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக பெற்றோர் அழைத்து சென்றனர். சிறுமிக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், கல்லீரலில் நீர் கட்டி இருப்பது தெரியவந்தது.
கடந்த 20ம் தேதி குழந்தைகள் நலப்பிரிவு அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் முகமதுஷாகீர், டாக்டர் குமரன், சாய்பிரபா அடங்கிய குழுவினர், சிறுமிக்கு லேப்ராஸ்கோபி வாயிலாக மூன்று துளைகள் இட்டு, கல்லீரலில் இருந்த 150 கிராம் நீர் கட்டியை அகற்றினர்.
மருத்துவக்கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''கட்டியை அகற்றாமல் இருந்திருந்தால், சிறுமிக்கு புற்றுநோய் வந்திருக்கும். இதே சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 7 லட்சம் ரூபாய் செலவாகும். டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.