/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ தாராசுரம் கோயிலில் மத்திய தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு தாராசுரம் கோயிலில் மத்திய தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு
தாராசுரம் கோயிலில் மத்திய தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு
தாராசுரம் கோயிலில் மத்திய தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு
தாராசுரம் கோயிலில் மத்திய தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூன் 12, 2025 06:36 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், மானம்பாடி நாகநாத சுவாமி, புதுக்கோட்டை மாவட்டம் சாரங்கீஸ்வரர் சிவன் கோவில்.
மேலும், கொடும்பாளூர் முசுகுன்றீஸ்வரர் கோவில், விராலுார் பூமீஸ்வரர், சூரியூர் திருவிளாங்குடி திருவன்னியுடையார், நாங்குபட்டி, நீர்பழனி சிவன் கோவில், குளத்துார், நார்த்தமலை ஆகிய கோவில்கள் மத்திய அரசின், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
தாராசுரம் கோவில் சிதைந்து, பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அகில பாரத இந்து மகாசபா மாநில பொதுச்செயலர் ராமநிரஞ்சன் தலைமையில், திருச்சி சரக இந்திய தொல்லியல் அலுவலகத்தில் சங்கு ஊதும் போராட்டம் நடந்தது.
பின், திருச்சி சரக இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளர் ராகுல் போஸ்லோவிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து நேற்று, தஞ்சாவூர் மாவட்டம் தராசுாரம் ஐராவதீஸ்வரர் கோவிலில், தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளர் ராகுல் போஸ்லோ தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கோவில் பரப்பளவு, சுற்றுச்சுவருக்கு பதிலாக கம்பி வேலி அமைப்பு. மழைக்காலத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகள், மழைநீரை வெளியேற்றுவதில் உள்ள இடையூறுகள், சேதமடைந்துள்ள ராஜகோபுரம் ஆகியவற்றை பார்வையிட்டார்.