/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ வார்டில் நாய் தொல்லை அதிகம் கடிபட்ட காங்., கவுன்சிலர் கோபம் வார்டில் நாய் தொல்லை அதிகம் கடிபட்ட காங்., கவுன்சிலர் கோபம்
வார்டில் நாய் தொல்லை அதிகம் கடிபட்ட காங்., கவுன்சிலர் கோபம்
வார்டில் நாய் தொல்லை அதிகம் கடிபட்ட காங்., கவுன்சிலர் கோபம்
வார்டில் நாய் தொல்லை அதிகம் கடிபட்ட காங்., கவுன்சிலர் கோபம்
ADDED : ஜூன் 12, 2025 02:16 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியின் 14வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன்; காங்., கட்சியை சேர்ந்தவர். இவரது வார்டில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், நடவடிக்கை எடுக்க கோரி, மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை கணபதி நகரில் அவர் ஆய்வு செய்தபோது, தெரு நாய் ஒன்று அவரை விரட்டியது. அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டவாறு அங்குமிங்கும் ஓடினார். இருப்பினும், அவரது காலை நாய் கடித்தது.
அப்பகுதியினர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கும்பகோணம் மொட்டை கோபுரம் மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சைக்கு பின், அவர் வீடு திரும்பினார்.
கவுன்சிலர் அய்யப்பன் கோபத்தில் கூறியதாவது:
என் வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. பலரை, தெரு நாய்கள் கடித்துள்ளன.
இது குறித்து மாநகராட்சி சுகாதார பிரிவிடம் பலமுறை புகார் அளித்துள்ளேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.