Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ என்.எஸ்., இன்ஜி., கல்லுாரியில் தேசிய தர மதிப்பீடு குழு ஆய்வு

என்.எஸ்., இன்ஜி., கல்லுாரியில் தேசிய தர மதிப்பீடு குழு ஆய்வு

என்.எஸ்., இன்ஜி., கல்லுாரியில் தேசிய தர மதிப்பீடு குழு ஆய்வு

என்.எஸ்., இன்ஜி., கல்லுாரியில் தேசிய தர மதிப்பீடு குழு ஆய்வு

ADDED : ஜூன் 09, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

இக் குழுவில் ஒடிசா மாநிலம் வீர சுரேந்திரசாய் பல்கலை பேராசிரியர் சஞ்சயா பேட்ரோ தலைமையில், ஹரியானா மனோரச்னா சர்வதேச ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஷியாம்தியாகி, தெலுங்கானா கோகராஜீ பொறியியல் தொழில்நுட்ப நிறுவன முதல்வர் பிரவீன் ஜீகி இடம் பெற்றிருந்தனர்.

கல்லுாரி உட்கட்டமைப்பு வசதி, கல்வித்தரம், துறைகளின் செயல்பாடுகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் குழுவினர் கலந்துரையாடி கருத்து கேட்டறிந்தனர். குழுவினர் கல்லுாரி செயல்பாட்டினை பாராட்டி தேசிய மதிப்பீடு, தரச்சான்று குழுவிற்கு பரிந்துரை செய்தனர்.

ஆய்வில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், கல்லுாரி இணைச்செயலாளர் நவீன்ராம் பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்தனர். ஆய்வு ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us