/உள்ளூர் செய்திகள்/தேனி/ லோக் அதாலத்தில் ரூ.11.88 கோடிக்கு தீர்வு லோக் அதாலத்தில் ரூ.11.88 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் ரூ.11.88 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் ரூ.11.88 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் ரூ.11.88 கோடிக்கு தீர்வு
ADDED : ஜூன் 09, 2024 04:44 AM

தேனி, : மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நடந்த லோக் அதாலத்தில் 6449 வழக்குகளில் ரூ.11.88 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத்திற்கு முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். சார்பு நீதிபதி கீதா துவக்கி வைத்தார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், அமர்வு நீதிபதி அனுராதா, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோபிநாதன், அமர்வு நீதிபதி கணேசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் லலிதாராணி, வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணன், பிரபாகர், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரியகுளத்தில் நடந்த லோக் அதாலத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சமீனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் கமலநாதன் முன்னிலை வகித்தனர். உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, உரிமையியல் நீதிபதிகள் ராஜேஷ்குமார், ராமநாதன் முன்னிலை வகித்தனர். ஆண்டிப்பட்டியில் உரிமையியல் நீதிபதி கபாலீஸ்வரன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன், போடியில் நீதித்துறை நடுவர்(விரைவு) ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
லோக் அதாலத்தில் விபத்து இழப்பீடு, இன்சுரன்ஸ், பேசி தீர்க்க கூடிய வழக்குகள், வங்கி வாராக்கடன்களுக்கான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் என 6449 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவைகளுக்கு ரூ.11கோடியே 88 லட்சத்து 85ஆயிரத்து 466க்கு தீர்வு காணப்பட்டது.