Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரோட்டை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காயம் தினமலர் இன்ஸ்டாகிராமில் வைரல்

ரோட்டை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காயம் தினமலர் இன்ஸ்டாகிராமில் வைரல்

ரோட்டை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காயம் தினமலர் இன்ஸ்டாகிராமில் வைரல்

ரோட்டை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காயம் தினமலர் இன்ஸ்டாகிராமில் வைரல்

ADDED : ஜூன் 29, 2024 05:33 AM


Google News
பெரியகுளம், : பெரியகுளத்தில் அதிவேகமாக வந்த அரசு பஸ் டீ குடிக்க ரோட்டை கடக்க முயன்ற ஜெயபிரகாஷ் என்பவர் மீது மோதி பலத்த காயமடைந்தார். விபத்து நடந்த நேரடி காட்சி தினமலர் இன்ஸ்டாகிராமில் வைரலாது,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னமணி 25. பெரியகுளம் சக்தி பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் பணியாளர். இதே நிறுவனத்தில் கிளை மேலாளர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மூலக்கரையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் 29. இருவரும் டூவீலரில் தேவதானப்பட்டிக்கு சென்று விட்டு, பெரியகுளம் வந்தனர். பங்களாபட்டி பிரிவு அருகே ரோட்டின் வலதுபுறம் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்கு, டூவீலரை ரோட்டின் இடது புறம் நிறுத்தினர். சின்னமணி ரோட்டை கடந்து டீ கடை சென்றார். அவரை பின்தொடர்ந்து ஜெயபிரகாஷ் சென்றார். பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் அதிவேகமாகவும், ஒலி எழுப்பாமல் வந்து ரோட்டை கடந்து சென்ற ஜெயபிரகாஷ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெயபிரகாஷ் அனுமதிக்கப்பட்டார்.

வடகரை எஸ்.ஐ., மலரம்மாள், உசிலம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் பழனி 42. யை கைது செய்தார். இந்த விபத்து நேரடி காட்சி தினமலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us