/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆண்டிபட்டியில் குழந்தையுடன் பெண் மாயம் ஆண்டிபட்டியில் குழந்தையுடன் பெண் மாயம்
ஆண்டிபட்டியில் குழந்தையுடன் பெண் மாயம்
ஆண்டிபட்டியில் குழந்தையுடன் பெண் மாயம்
ஆண்டிபட்டியில் குழந்தையுடன் பெண் மாயம்
ADDED : ஜூன் 29, 2024 05:03 AM
ஆண்டிபட்டி : கூடலூரை சேர்ந்தவர் பிளம்பர் தங்க பாண்டீஸ்வரன் 29. இவரது மனைவி ஐஸ்வர்யா 25, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது ஆண்டிபட்டி ஒன்றியம், எரதிமக்காள்பட்டியில் வசித்து வருகிறார். ஜூன் 24 ல் கூடலூரில் உள்ள தங்க பாண்டீஸ்வரனின் தாயாரை பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு தனது 2வது மகன் சரு 3, என்பவருடன் சென்றார்.
கூடலூரில் பாண்டீஸ்வரன் தனது தாயாரிடம் விசாரித்த போது அங்கு வரவவில்லை என்பது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்க பாண்டீஸ்வரன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.