கிணற்றில் விழுந்த முதியவர் இறப்பு
கிணற்றில் விழுந்த முதியவர் இறப்பு
கிணற்றில் விழுந்த முதியவர் இறப்பு
ADDED : ஜூன் 09, 2024 04:48 AM
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் 25, இவரது தந்தை மயில்ராஜ் 65, மனைவியுடன் மகன் வீட்டில் வசித்து வந்தார்.
சமீபத்தில் குடலிறக்க ஆப்பரேஷன் மற்றும் வலதுகாலில் ஆப்பரேஷன் செய்து, நடப்பதற்கு சிரமப்பட்டு வந்தார்.
தினமும் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் அருகில் உள்ள அவரது தோட்டத்து பக்கமாக நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். இரு நாட்களுக்கு முன் நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்ப வரவில்லை. தோட்டத்து பக்கம் சென்று பார்த்த போது கிணற்றின் அருகில் வாக்கிங் ஸ்டிக் இருந்துள்ளது. மயில்ராஜ் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இது குறித்து கார்த்திக் புகாரில் முதியவர் இறப்பு குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.