/உள்ளூர் செய்திகள்/தேனி/ ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு
ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு
ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு
ராஜ்கவுடர் கண்மாயில் முழுமை பெறாத சீரமைப்பு பணிகள் பாசன விவசாயிகள் தவிப்பு

சேதமடைந்த கரைகள்
ஆதீஸ்வரன், சமூக ஆர்வலர், ஓடைப்பட்டி: கண்மாய் பராமரிப்புப் பணி நடந்தது போல் தெரியவில்லை. ரூ.4.5 கோடிக்கு என்ன வேலை செய்தார்கள். கண்மாய் ஒரு பகுதியில் மட்டும் செம்மண்ணை அள்ளி உள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. கண்மாய்க்கு சண்முகா நதி அணை தண்ணீர் வரவில்லை. துார் வாரிய போது கரைகள் அமைத்தது தரமாக இல்லை. சமீபத்தில் பெய்த மழையில் கரைகள் சேதமடைந்தன. இந்த கண்மாய் நிரம்பும் போது, நீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான தோட்டக் கிணறுகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரவும், கால்நடைகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யவும் பயன்படும் இந்த கண்மாய் முறையாக பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்துடைப்புப் பணி
மணிகண்டன், ஓடைப் பட்டி : கண்மாய் முழுமையாக துார்வார வில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. கண்மாயின் மொத்தப் பரப்பளவில் 3 ல் 2 பங்கு மட்டும் தூர் வாரி உள்ளனர். கரைகள் சரிவர அமைக்கவில்லை. கிழக்குப் பக்கம் சிமென்ட் சிலாப் பதிக்கவில்லை. முதலில் சர்வே செய்து, நான்கு மால் காண்பித்து பணிகள் செய்திருக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை
தனுஷ்கோடி, பேரூராட்சித் தலைவர்: பராமரிப்புப் பணிகள் நல்ல படியாக நடந்துள்ளது. மழை அதிகமாக பெய்ததால் மண் கரையில் கசிவு ஏற்படுவது இயல்பானது தான். கிழக்குப் பக்கம் ரோடு என்பதால் சிமென்ட் சிலாப்புகள் பதிக்கவில்லை.