/உள்ளூர் செய்திகள்/தேனி/ செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் அதிகரிப்பு: ஏல விவசாயிகள் பாதிப்பு செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் அதிகரிப்பு: ஏல விவசாயிகள் பாதிப்பு
செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் அதிகரிப்பு: ஏல விவசாயிகள் பாதிப்பு
செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் அதிகரிப்பு: ஏல விவசாயிகள் பாதிப்பு
செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் அதிகரிப்பு: ஏல விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 18, 2024 04:55 AM
கம்பம், : இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் ஏலச் செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏல விவசாயிகள் பாதிக்கப்பட்டு கவலை அடைந்துள்ளனர்.
கேரளா இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஜூலை கடைசி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் காய் பறிப்பு இருக்கும். ஆனால் இந்தாண்டு டிசம்பருக்கு தள்ளி போகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அழுகல், பூஞ்சான நோய்கள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக மழை இல்லாமல் இருந்தது. தற்போது பலத்த மழை கடந்த ஒரு வாரமாக பெய்து வருகிறது. இதனால் ஏலச் செடிகளில் தட்டை, சரம், கிழங்கு போன்ற பகுதிகளில் அழுகல் நோய் தாக்கி உள்ளது.
நெடுங்கண்டம், பாரத்தோடு, பூப்பாறை, ஆட்டுபாறை, உடும்பன்சோலை, பைசன் வேலி, கல்லாறு, வண்டிப் பெரியாறு, கணவாகுழி, கல்தொட்டி, சாஸ்தா நடை உள்ளிட்ட பகுதிகளில் அழுகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப ஆலோசகர் அன்பழகன் கூறியதாவது :
ஏலச் செடிகளில் காய் அழுகல், கிழங்கு அழுகல் நோய் கட்டுப்படுத்த இன்பினிட்டோ 400 மில்லி, ரிடோமில் கோல்டு 400 கிராம், மேக்சி மெட் 400 கிராம், போலியோ கோல்டு 400 மில்லி, புரோ பில்லர் 400 கிராம், காப்பர் சல்பேட் ஒரு சதவீதம் மேலே சொன்ன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். கிழங்கு அழுகலுக்கு எமிஸ்டோ பிரைம் 200 மில்லி, காப்பர் ஆக்சி குளோரைடு 250 கிராம், ஐ கேர் 200 கிராம், காப்பர் ஆக்சிகுளோரைடு 250 கிராம், இதில் ஏதேனும் ஒன்றை கிழங்கு பகுதியில் ஒரு செடிக்கு ஒன்று முதல் 2 லிட்டர் வரை தெளித்தும், ஊற்றியும் கட்டுப்படுத்தலாம்., என்றார்.