/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 04:12 AM
கூடலுார், : முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், வீரபாண்டி வழியாக வைகை அணை வரை செல்லும் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.