/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்வு * துணை கண்காணிப்புக்குழு நாளை ஆய்வு முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்வு * துணை கண்காணிப்புக்குழு நாளை ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்வு * துணை கண்காணிப்புக்குழு நாளை ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்வு * துணை கண்காணிப்புக்குழு நாளை ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்வு * துணை கண்காணிப்புக்குழு நாளை ஆய்வு
ADDED : ஜூலை 17, 2024 08:20 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 4 அடி உயர்ந்து 125.10 அடியை எட்டியுள்ள நிலையில், நாளை (ஜூலை 19ல்) மத்திய நீர்வள ஆணையத்தின் துணைக் கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தைவிட முன்கூட்டியே மே இறுதி வாரத்தில் துவங்கியது. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்த போதிலும் முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கூடுதலாக பெய்ய வில்லை. ஜூன் இறுதி வாரத்தில் மழையால் நீர்மட்டம் சற்று உயரத் துவங்கியது. ஜூலை 2ல் அதிகபட்சமாக நீர்மட்டம் 123.75 அடியை எட்டியது. அதன்பின் மழை குறைவால் ஜூலை 15ல் 121 அடியாக நீர்மட்டம் குறைந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்ப் பிடிப்பில் கனமழை பெய்து வருகிறது. நீர்மட்டம் இரண்டு நாட்களில் நான்கு அடி உயர்ந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 125.10 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் 30.8 மி.மீ., தேக்கடியில் 18.6 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5395 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 3639 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக 1267 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் முழுவதும் மழை தொடர்ந்ததால் அணை நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 114 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
துணை கண்காணிப்புக்குழு நாளை ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் ராகேஷ் காஷ்யப் தலைமையிலான கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையில் உள்ளது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருண் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 2024 பிப்.15ல் அணையின் நீர்மட்டம் 129.65 அடியாக இருந்தபோது ஆய்வு மேற்கொண்டது. தற்போது மழை பெய்து வருவதால் அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நாளை ஆய்வு மேற்கொள்கிறது. பின் மாலை குமுளியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.