Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ADDED : ஜூலை 15, 2024 04:39 AM


Google News
போடி : போடி சி.பி.ஏ., கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 7 நாட்கள் நடந்தது.

நிகழ்விற்கு கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் புருஷோத்தமன், துணைத் தலைவர் ராமநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கமலநாதன், சொருபன், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் சிவா, உதவிப் பேராசிரியர் அபிஷேக் வரவேற்றனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகாசி அய்யநாடார் ஜானகி கல்லூரி பேராசிரியர்கள் பொன்னுராஜன், சுந்தரராஜ், உத்தமபாளையம் ஹாஜி கர்த்தராவுத்தர் கல்லூரி பேராசிரியர் சபானா பர்வின், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பேராசிரியர் அழகேசன், உசிலம்பட்டி டி.எம்.டி., கல்லூரி பேராசிரியர் சுபாஷ், மதுரா கல்லூரி உதவி பேராசிரியர் காந்திமதி, உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி, யோகா பயிற்சியாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவர்கள் தன்னம்பிக்கை, விடா முயற்சி மேற்கொண்டு கல்வி கற்பதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us