/உள்ளூர் செய்திகள்/தேனி/ வராக நதியில் மணல் கொள்ளை; பள்ளங்களை குப்பையால் மூடும் அவலம் வராக நதியில் மணல் கொள்ளை; பள்ளங்களை குப்பையால் மூடும் அவலம்
வராக நதியில் மணல் கொள்ளை; பள்ளங்களை குப்பையால் மூடும் அவலம்
வராக நதியில் மணல் கொள்ளை; பள்ளங்களை குப்பையால் மூடும் அவலம்
வராக நதியில் மணல் கொள்ளை; பள்ளங்களை குப்பையால் மூடும் அவலம்
ADDED : ஆக 04, 2024 06:19 AM
பெரியகுளம் : பெரியகுளம் வராகநதியில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வேண்டிய வருவாய் துறை, போலீசார் கண்டும் காணாது போல் நடந்து கொள்கின்றனர்.
பெரியகுளத்தைச் சுற்றி வராகநதி, பாம்பாறு, செலும்பாறு, கல்லாறு, மஞ்சளாறு போன்ற ஆறுகளும், பல சிற்றோடைகள் செல்கின்றன. இந்த நீர் ஆதாரங்களில் சமீபமாக மணல் கொள்ளை அதிகளவில் நடக்கிறது. பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் இரவில் மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கொள்ளையர்கள் அதிகாரிகளுடன் சிண்டிகேட் அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதுபெரும்பாலும் நள்ளிரவு 1:00 மணிக்கு நடக்கிறது. இதனால் நீர்நிலைகளில் மணற்பாங்கு குறைந்து நீர் தேங்காத நிலை ஏற்படுகிறது. புகார் அதிகரித்து மணல் கடத்தலை தடுக்க ஓரிரு நாட்கள் ரெய்டு நடத்துகின்றனர். இந்த ரெய்டு பற்றிய தகவல் மணல் கடத்தல் காரர்களுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் அவர்கள் மணல் கொள்ளையை ஒத்திவைத்தனர். மாவட்டத்தில் மணல் குவாரிகளை இல்லாத நிலையில் பல இடங்களில் நடக்கும் கட்டுமானங்களில் திருட்டு மணல் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு டிராக்டர் மணல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர்.
ஜெயமங்கலம் பகுதியில் வராகநதியில் மணல் திருடுபவர்கள் ஆற்றில் உருவான பள்ளங்களை மறைக்க குப்பையை கொட்டுகின்றனர். போலீசாருடன் வருவாய்த்துறை இணைந்து மணல் கொள்ளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.