/உள்ளூர் செய்திகள்/தேனி/ பறவைகளுக்கு உணவாகும் விளைந்த சிறுதானியங்கள் பறவைகளுக்கு உணவாகும் விளைந்த சிறுதானியங்கள்
பறவைகளுக்கு உணவாகும் விளைந்த சிறுதானியங்கள்
பறவைகளுக்கு உணவாகும் விளைந்த சிறுதானியங்கள்
பறவைகளுக்கு உணவாகும் விளைந்த சிறுதானியங்கள்
ADDED : ஜூலை 17, 2024 12:20 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே விளைந்த சிறுதானிய கதிர்களை உணவாக்க குருவி, மைனா உள்ளிட்ட சிறு பறவை இனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன.
ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம், கரிசல்பட்டி, மலையாண்டிநாயக்கன்பட்டி, பிராதுக்காரன்பட்டி, ஆசாரிபட்டி உட்பட பல கிராமங்களில் கோடை சாகுபடியில் சோளம், கம்பு விதைப்பு செய்திருந்தனர். மூன்று மாதத்திற்கு முன் விதைக்கப்பட்டு, தற்போது சோளம், கம்பு பயிராக கதிர்களுடன் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சோளம் கம்பு கதிர்களை உணவாக்குவதற்கு இப்பகுதியில் சிறு பறவையினங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.
விவசாயிகள் கூறியதாவது: சிறு பறவை இனங்களால் அதிக சேதம் ஏற்படப் போவதில்லை. சூரியகாந்தி பயிர்களில் விளைந்த விதைகளை கிளி கூட்டங்கள் சேதப்படுத்தும்.
இதனால் அதன் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பால் சிறு பறவை இனங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.