/உள்ளூர் செய்திகள்/தேனி/ குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்துங்க; பேரூராட்சிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்துங்க; பேரூராட்சிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்துங்க; பேரூராட்சிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்துங்க; பேரூராட்சிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்துங்க; பேரூராட்சிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2024 12:20 AM
கம்பம் : குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் சப்ளை செய்வதால் மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு ஏற்படுவதால் குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்திட காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளது.
கம்பம் பகுதி கிராமங்களில் வயிற்றுப் போக்கு, காய்ச்சல்,மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் மஸ்தூர் பணியாளர்கள் நியமனத்திலும் செயல் அலுவலர் காலம் தாழ்த்தி வருகிறார். இதற்கிடையே காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி , சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ' குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் வயிற்றுப்போக்கு, காமாலை, டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் அதிகமாக தெரிகிறது.
இது தொடர்பாக காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் , பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் இருந்து அப்படியே பம்பிங் செய்து சப்ளை செய்வதால், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை பரவி வருகிறது. எனவே,குடிநீரை சுத்திகரித்து வழங்க ஆவண செய்ய வேண்டும். ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் வீதம் குளோரின் கலப்பதை உறுதி செய்திடவும், பகிர்மான குழாய்கள் உடைப்பு ஏற்பட்டால் உடனே சரி செய்திட வேண்டும். மேல்நிலை தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
குளோரின் போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். குடிநீரை காய்ச்சிக் குடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.