/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜீப்புகள் மோதிய விபத்தில் 13 பெண் தொழிலாளர்கள் காயம் ஜீப்புகள் மோதிய விபத்தில் 13 பெண் தொழிலாளர்கள் காயம்
ஜீப்புகள் மோதிய விபத்தில் 13 பெண் தொழிலாளர்கள் காயம்
ஜீப்புகள் மோதிய விபத்தில் 13 பெண் தொழிலாளர்கள் காயம்
ஜீப்புகள் மோதிய விபத்தில் 13 பெண் தொழிலாளர்கள் காயம்
ADDED : செப் 23, 2025 04:52 AM
கம்பம்: ஏலத்தோட்டத்திற்கு வேலைக்கு சென்று திரும்பிய தொழிலாளர்கள் ஜீப்பும், எதிரே வந்த ஜீப்பும் நேருக்கு நேர் மோதியதில் ஏலத் தோட்ட தொழிலாளிகள் 14 பெண்கள் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் கம்பமெட்டு அருகே உள்ள ஏலத்தோட்டத்திற்கு கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து மாலை ஜீப்பில் ஊர் திரும்பினர். ஜீப்பை டிரைவர் குமார் ஒட்டி வந்துள்ளார். கம்பமெட்டு ரோடு மலையடிவாரத்தில் கம்பத்தில் இருந்து உடுப்பன்சோலையை நோக்கி சென்ற ஜீப் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜீப்பில் பயணம் செய்த பெண் தொழிலாளிகள் நீதிமணி 50, பார்வதி 60, ராஜேஸ்வரி 60, சின்னதாய் 58, சாந்தி 38, பிரியா 35, ராஜம்மாள் 63, லட்சுமி 34, சூர்யா 34, ரேகா 42, ராணி 55 போது மணி 67, கனிமொழி 30 ஆகியோர் காயமடைந்தனர். தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப் டிரைவர் கம்பத்தை சேர்ந்த குமார் 46 பலத்த காயமடைந்தார்.
கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஜீப்பை ஒட்டி வந்த உடுப்பன்சோலையை சேர்ந்த ஜோமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.