Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ அரசு டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க., நிர்வாகிக்கு 7 ஆண்டு சிறை

அரசு டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க., நிர்வாகிக்கு 7 ஆண்டு சிறை

அரசு டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க., நிர்வாகிக்கு 7 ஆண்டு சிறை

அரசு டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க., நிர்வாகிக்கு 7 ஆண்டு சிறை

ADDED : செப் 23, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
பெரியகுளம்; தேனி மாவட்டம் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டர்களை ஆபாசமாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்த தி.மு.க., நகர துணை செயலாளர் சேதுராமனுக்கு 45, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன். தி.மு.க., நகர துணை செய லாளராக உள்ளார்.

இவரது மனைவி லதாவை 32, வயிற்று வலியால் 2022 ஜூன் 9ல் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

மனைவிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி டாக்டர்களை ஆபாசமாக பேசி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மருத்துவமனை கேட்டை பூட்டியுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், தென்கரை போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்த நேரத்தில் பாப்பியம்பட்டி கண்மாயில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களுக்கு டாக்டர்கள்

சிகிச்சை அளித்தனர். அப்போது சேதுராமன் தனது மனைவிக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி பிரச்னை செய்தது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து சேதுராமன் மீது தமிழ்நாடு மருத்துவ சேவையாளர் மற்றும் மருத்துவ சேவை நிறுவன வன்முறை வழக்குப்பதிவு செய்தனர். இவ் வழக்கு தேனி மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

இதில் சேதுராமனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சந்திரசேகர் தீர்ப் பளித்தார்.

அரசு தரப்பில் வழக்கறிஞர் கற்பூரசுந்தரம் ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us