Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உரங்கள் போதிய கையிருப்பு வேளாண்துறை தகவல்

உரங்கள் போதிய கையிருப்பு வேளாண்துறை தகவல்

உரங்கள் போதிய கையிருப்பு வேளாண்துறை தகவல்

உரங்கள் போதிய கையிருப்பு வேளாண்துறை தகவல்

ADDED : செப் 26, 2025 02:19 AM


Google News
தேனி: மாவட்டத்தில் தேவையான அளவிற்கு உரங்கள் கையிருப்பில் உள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

வேளாண்துறை அதிகாரி கூறியதாவது: மாவட்டத்தில் 74 கூட்டுறவு சங்கங்கள், 180க்கும் மேற்பட்ட தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது யூரியா 1101 டன், டி.ஏ.பி., 682 டன், பொட்டாஷ் 629 டன், கம்ளக்ஸ் 3051 டன், சூப்பர் பாஸ்பேட் 433 டன், அங்கக உரங்கள் 71.9 டன் கையிருப்பில் உள்ளன.

மாவட்டத்தில் தற்போதைய வேளாண் சாகுபடிக்கு ஏற்ப உரங்கள் கையிருப்பில் உள்ளன. உர விற்பனை மையங்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் விலைப்பட்டியில், இருப்பு பட்டியில் வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us