ADDED : செப் 26, 2025 02:19 AM
தேனி: மத்திய அரசு சார்பில் இளம் சாதனையாளர்களுக்கான PM YASASVI திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட பள்ளிகளில் 9, பிளஸ் 1 படிக்கும், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு குறைவான மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட பள்ளி விபரங்களை சி.இ.ஓ., அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். கடந்த நிதியாண்டில் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் இணையத்தில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். மேலும் விரபங்களையும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.