/உள்ளூர் செய்திகள்/தேனி/ தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அ.தி.மு.க., நிர்வாகி தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அ.தி.மு.க., நிர்வாகி
தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அ.தி.மு.க., நிர்வாகி
தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அ.தி.மு.க., நிர்வாகி
தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அ.தி.மு.க., நிர்வாகி
ADDED : ஜூன் 22, 2025 09:21 PM

கம்பம்:தேனி மாவட்டம் கம்பத்தில் மற்றொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கத்தரிக்கோலால் குத்திய சின்னமனுார் அ.தி.மு.க., நகர செயலாளர் பிச்சைக்கனி 43, அவரது காதலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சின்னமனுார் அ.தி.மு.க., நகர செயலாளர் பிச்சைக்கனி. இவரது மனைவி மகாலட்சுமி 38. இரு குழந்தைகள் உள்ளனர். கம்பம் கக்கன் காலனியில் வசிக்கும் ஐஸ்வர்யாவுடன் 34, பிச்சைக்கனிக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களாக பிச்சைக்கனி, கம்பத்தில் ஐஸ்வர்யா வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கணவரை அழைத்துச் செல்ல நேற்று காலை கம்பம் கக்கன் காலனிக்கு சென்ற மகாலட்சுமி, அவரை அழைத்தார். அப்போது பிச்சைக்கனி, ஐஸ்வர்யா இணைந்து மகாலட்சுமியுடன் தகராறு செய்தனர்.
ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, மகாலட்சுமியை பிடித்துக்கொள்ள, பிச்சைக்கனி கத்தரிக்கோலை எடுத்து குத்தினார். இதில் மகாலட்சுமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. பின் அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து பிச்சைக்கனி, ஐஸ்வர்யா மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.