/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி வைகை அணை நீர்மட்டம் உயர்வு நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி வைகை அணை நீர்மட்டம் உயர்வு
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி வைகை அணை நீர்மட்டம் உயர்வு
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி வைகை அணை நீர்மட்டம் உயர்வு
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி வைகை அணை நீர்மட்டம் உயர்வு
ADDED : ஜூன் 22, 2025 09:14 PM

ஆண்டிபட்டி:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். கடந்த சில மாதங்களில் இருப்பில் இருந்த நீரை மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களுக்கு ஜூன் 15 முதல் வினாடிக்கு 900 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது பெரியாறு அணையில் திறக்கப்பட்டு உள்ள நீரில் குறிப்பிட்ட அளவு வைகை அணை வந்து சேருகிறது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு வெளியேறும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்கிறது.
டிச. 15ல் நீர் திறப்பின் போது 61.22 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 62.95 அடியாக இருந்தது.(மொத்த உயரம் 71 அடி). அணையில் இருந்து பாசனம், குடிநீருக்காக வினாடிக்கு 969 கன அடி நீர் வெளியேறுகிறது. நீர் வரத்து வினாடிக்கு 1484 கன அடி. முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளதால் வைகை அணை நீர்மட்டம் விரைந்து உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.