/உள்ளூர் செய்திகள்/தேனி/ தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு வணிகராக விண்ணப்பம் வரவேற்பு தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு வணிகராக விண்ணப்பம் வரவேற்பு
தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு வணிகராக விண்ணப்பம் வரவேற்பு
தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு வணிகராக விண்ணப்பம் வரவேற்பு
தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு வணிகராக விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 18, 2025 04:42 AM
தேனி: கிராமிய தபால்துறை ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என, தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: 18 வயதுக்கு மேற்பட்ட 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற, சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முகவருக்கு வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் 5 ஆயிரம் President of India என்ற பெயரில் தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்து அதற்கான சான்றிழையும், விண்ணப்பதாரர் தங்கள் பெயரில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் விபரங்களை அளிக்க வேண்டும். தங்களது உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பித்தரப்படும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை தங்கள் அருகாமையில் உள்ள தலைமை, துணை தபால் அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து, 'தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர், தேனி கோட்டம், தேனி - 625 531,' என்ற முகவரிக்கு ஜூன் 20க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பித்தவர்கள் ஜூன் 23ல் மாலை 3:00 மணியளவில் தேனி கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலில் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 99768 21104 என்ற அலைபேசியில் வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம்,
இவ்வாறு தெரிவித்துள்ளார்.