/உள்ளூர் செய்திகள்/தேனி/ பா.ஜ., நிர்வாகிகள் போலீசார் வாக்குவாதம் பா.ஜ., நிர்வாகிகள் போலீசார் வாக்குவாதம்
பா.ஜ., நிர்வாகிகள் போலீசார் வாக்குவாதம்
பா.ஜ., நிர்வாகிகள் போலீசார் வாக்குவாதம்
பா.ஜ., நிர்வாகிகள் போலீசார் வாக்குவாதம்
ADDED : ஜூன் 23, 2025 08:59 AM
பெரியகுளம் : பெரியகுளத்தில் பா.ஜ., வினர் வேல் ஏந்தி நடந்து ஊர்வலமாக செல்வதற்கு போலீசார் தடை விதித்த நிலையில், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வதற்கு நேற்று பா.ஜ., மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பெரியகுளத்தில் இருந்து, ஏராளமானோர் வாகனத்தில் செல்ல தயாராகினர். முன்னதாக பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து கையில் வேல் ஏந்தி ஊர்வலமாக செல்வதற்கு நடக்க முயன்றனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பா.ஜ.,வினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு பா.ஜ., வினர் வாகனங்களில் மாநாட்டிற்கு சென்றனர்.-