/உள்ளூர் செய்திகள்/தேனி/ யு.பி.ஐ., பயன்பாட்டால் நாணயங்கள் தட்டுப்பாடு யு.பி.ஐ., பயன்பாட்டால் நாணயங்கள் தட்டுப்பாடு
யு.பி.ஐ., பயன்பாட்டால் நாணயங்கள் தட்டுப்பாடு
யு.பி.ஐ., பயன்பாட்டால் நாணயங்கள் தட்டுப்பாடு
யு.பி.ஐ., பயன்பாட்டால் நாணயங்கள் தட்டுப்பாடு
ADDED : செப் 24, 2025 06:34 AM
தேனி: பொதுமக்கள் பொருட்களை பெற்று பில் செலுத்தும் போது பெரும்பாலனோர் பணபறிமாற்றத்திற்கான டிஜிட்டல் யு.பி.ஐ., செயலி மூலம் செலுத்துவது அதிகரித்தது. இதனால் ஒரு ரூபாய், ரூ.2, ரூ.5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கம் குறைந்துள்ளது.
தேனி மாவட்ட ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் யு.பி.ஐ., பயன்பாடு பரவலாக உள்ளது. ஓட்டல்கள், டீ கடைகள், வணிக நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் பில் தொகை உரிமையாளரின் சிலரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில் பிரச்னைகள் எழுந்தன. இதனால் நகரில் உள்ள சில ஓட்டல் நிர்வாகத்தினர் தங்களது வாடிக்கையாளர்களிடம் நேரடியாக பணம் செலுத்த அறிவுறுத்தினர்.
வாடிக்கையாளர்களுக்கு ரூ.100, ரூ.500 ரூபாய் நோட்டுகளை வழங்குகின்றனர். இவர்களுக்கு சில்லரை வழங்க நாணயம் தட்டுப்பாடாக உள்ளது. சில்லரை நாணயங்கள் பற்றாக்குறையால் கூடுதல் விலை கொடுத்து வாங்கி தட்டுப்பாட்டை சமாளிக்கின்றனர்.