ADDED : செப் 24, 2025 06:36 AM
கம்பம் : ஜி.எஸ்.டி., வரி முழுமையாக மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், ஒவ்வொரு குடும்பத்தினரும் மருத்துவக் காப்பீடு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் கம்பத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் வினோத் பால், மேலாளர் ஆரோக்கிய ஜெரால்ட், கிளை மேலாளர் கோகிலா உள்ளிட்ட பலர் ஜி.எஸ்.டி., வரி விலக்கால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து விளக்கினர்.