/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரேஷன் கடை திறக்காததால் நீண்டதுாரம் சென்று பொருட்கள் வாங்கி வர சிரமம் போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல் ரேஷன் கடை திறக்காததால் நீண்டதுாரம் சென்று பொருட்கள் வாங்கி வர சிரமம் போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல்
ரேஷன் கடை திறக்காததால் நீண்டதுாரம் சென்று பொருட்கள் வாங்கி வர சிரமம் போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல்
ரேஷன் கடை திறக்காததால் நீண்டதுாரம் சென்று பொருட்கள் வாங்கி வர சிரமம் போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல்
ரேஷன் கடை திறக்காததால் நீண்டதுாரம் சென்று பொருட்கள் வாங்கி வர சிரமம் போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல்
ADDED : செப் 24, 2025 06:36 AM

போடி :போடி நகராட்சி 9வது வார்டு புதுக்காலனி வெண்ணிமலை நகரில் ரேஷன் கடை கட்டி முடித்தும் திறக்காததால் நீண்ட துாரம் சென்று பொருட்கள் வாங்கி வர சிரமம் அடைவதாகவும், ரயில்வே சுரங்கப் பாதையில் போதிய விளக்கு வசதி இன்றி இருளில் மூழ்கியும், குண்டும், குழியுமான ரோடால் குடியிருப்போர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இப்பகுதியில் புதுக்காலனி, வெண்ணிமலைதெரு, புதுக்காலனி முதல், 2 வது தெரு, ஸ்பைஸ்வாலி பப்ளிக் பள்ளி தெரு, ஆதிபராசக்தி கோயில் தெரு உட்பட 20க்கு மேற்பட்ட தெருக்களில் 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் ரேஷன் கடை, சாக்கடை, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
குடியிருப்போர் நிர்வாகிகளான அர்ச்சனா, ஜமுனா ராணி, முத்துலட்சுமி, பரமசிவம், ராமையா ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் பகுதிக்காக கூறியதாவது:
ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வருமா எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. இதனை இரவில் சிலர் மது பாராகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி வருகிறது. கடை பயன் பாட்டிற்கு வராததால் ரேஷன் பொருட்கள் பெற அரை கி.மீ., தூரம் நடந்து வி.கே., ஹாஸ்டல் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற வேண்டியது உள்ளது. ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருளில் ரயில்வே சுரங்கப் பாதை போடி சுப்புராஜ் நகரில் இருந்து புதுக் காலனி செல்லும் ரோட்டின் இடையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. சுரங்கப் பாதையில் போதிய விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளது. கழிவுநீர் கசிந்து துர்நாற்றம் வீசி வருவதால் சுரங்கப் பாதை வழியாக மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். விளக்கு வசதி செய்து கழிவு நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு வசதி தேவை புதுக்காலனி பரமசிவன் கோயில் செல்லும் பாதையில் ரூ.1.20 கோடி செலவில் ரோடு அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. மூன்று மாதம் ஆகியும் பணிகள் துவங்காமல் கிடப்பில் உள்ளன. இது போல ஆதிபராசக்தி கோயில் - சி.பி.ஏ., கல்லூரி செல்வதற்கு ரோடுக்கான பாதை இருந்தும், ரோடு வசதி இன்றி குண்டும் குழியுமாக மண் ரோடாக உள்ளது. மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குண்டும், குழியுமான ரோட்டை சீரமைத்து, தார் ரோடு வசதி ஏற்படுத்திட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைகளால் சுகாதாரகேடு புதுக்காலனி தெருவில் வீட்டு மனைக்கான இடங்கள் இருந்தும் கட்டடம் கட்டப்படாமல் முட்புதர்களால் சூழ்ந்து உள்ளன. வீடு தோறும் குப்பை வாங்க துப்புரவு பணியாளர்கள் வந்தாலும் சிலர் காலி இடங்களில் குப்பை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் புகையை சுவாசிக்கும் முதியோர், குழந்தைகள் பாதிப்படைகின்றனர். குப்பை அகற்ற, தீ வைப்பதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டா தேவை வெண்ணிமலை நகர், புதுக்காலனி 4 வது தெருவில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். பட்டா கேட்டு விண்ணப்பித்தும் பட்டா கிடைக்காமல் தவிக்கின்றனர். உரிய நபர்களுக்கு பட்டா வழங்கிட வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.