ADDED : அக் 10, 2025 03:32 AM
கூடலுார்: கூடலுாரில் மந்தையம்மன் கோயில் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. மாலையில் கொட்டும் மழையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். உடன் சுவாமி வேடமணிந்த பக்தர்கள் சென்றனர்.


