ADDED : செப் 26, 2025 02:25 AM

வீட்டில் புகையிலைபதுக்கியவர் கைது
தேனி: அல்லிநகரம் எஸ்.ஐ., கண்ணன் தலைமையிலான போலீசார் பொம்மையக் கவுண்டன்பட்டி வீருசின்னம்மாள்தெருவில் செந்தில்குமார் 50, என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட 4 வகையான ரூ.92,190 மதிப்புள்ள 107.850 கிலோ எடையுள்ள 19,692 பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கிவைககப்பட்டு இருந்தது. அதனை கைப்பற்றிய செந்தில்குமாரை கைது செய்தனர். செந்தில்குமார் மீது அல்லிநகரம் போலீசில் போதைப் பொருட்கள் பதுக்கி விற்ற வழக்குகள் ஏற்கனவே உள்ளது.
போக்சோவில் கைது
பெரியகுளம்: இப் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி 3 ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேல்மங்கலத்தைச் சேர்ந்த சுருளிமுத்து 45.யை பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நீதிமன்ற பணிக்கு
இடையூறு செய்தவர் கைது
போடி: பழனிசெட்டிபட்டி சஞ்சய் காந்தி தெருவில் வசிப்பவர் செல்வேந்திரன் 45. இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தேவாரத்தில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி உள்ளார். இந்த வழக்கு வாய்தாவிற்காக போடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மது போதையில் நேற்று வந்துள்ளார். சாட்சி விசாரணையின் போது செல்வேந்திரன் அலைபேசியில் பேசியபடி, நீதிமன்ற பணிகளை செய்ய விடாமல் குறுக்கீடு செய்துள்ளார். நீதிமன்ற தலைமை எழுத்தர் வகிதா பானு 46. புகாரில் போடி டவுன் போலீசார் செல்வேந்திரனை கைது செய்தனர்.
டூவீலர் திருட்டு
தேனி: பொம்மையகவுண்டன்பட்டி மாரியம்மன் கோயில் தெரு விக்னேஷ்குமார் 20. இவர் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் ஓட்டல் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு, சாவியை எடுக்காமல் டீ கடைக்கு சென்றார். டீகடையில் இருந்து திரும்பி வந்தபோது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை காணவில்லை. புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.