ADDED : ஜூன் 23, 2025 09:10 AM
போடி : போடி அருகே ரங்கநாதபுரத்தில் அனைத்திந்திய குலாலர் சமூக சேவை கல்வி அறக்கட்டளை, தேனி மாவட்ட சாலிவாகணன் மக்கள் இயக்கம் சார்பில், மாணவர்களுக்கான கல்வி பரிசு வழங்கும் விழா நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வாசுதேவன், செயலாளர் வழக்கறிஞர் சதீஸ், மாவட்டப் பொருளாளர் ராஜா, சட்ட ஆலோசகர் மணிகண்ட பிரபு முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் மணிவேல்ராஜ் வரவேற்றார். விழாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ஊக்கத் தொகை வழங்கப்பட்டன. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உட்பட பலர், பங்கேற்றனர்.