/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்து போராட்டம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்து போராட்டம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்து போராட்டம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்து போராட்டம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்து போராட்டம்
ADDED : செப் 26, 2025 02:23 AM

தேனி: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புறக்கணிக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று நடந்த முகாம்களில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பங்கேற்க வில்லை.
அலுவலக பணிகளில் ஈடுபட்டனர். மற்ற துறை அதிகாரிகள் கூடுதலாக முகாம் பணிகளை கவனிக்கும் நிலை ஏற்பட்டது. மாலை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போரட்டம் நடந்தது. வருவாய்த்துறை அலுவலர் சங்கமாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
நில அளவையர்கள் கூட்டமைப்பு சங்க மாவட்ட நிர்வாகி வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
வி.ஏ.ஓ.,க்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவிதா, கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் அழகர், வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சுரேந்திரன், சதீஸ்குமார், ஒச்சாத்தேவன், நாகராஜ், சிவன்காளை, சங்கர், மகிமை பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.