Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலி ஆவணம் மூலம் 89 ஏக்கர் பத்திரபதிவை கண்டித்து தொடர் தர்ணா இரவு பகலாக திறந்த வெளியில் தங்கி போராட்டம்

போலி ஆவணம் மூலம் 89 ஏக்கர் பத்திரபதிவை கண்டித்து தொடர் தர்ணா இரவு பகலாக திறந்த வெளியில் தங்கி போராட்டம்

போலி ஆவணம் மூலம் 89 ஏக்கர் பத்திரபதிவை கண்டித்து தொடர் தர்ணா இரவு பகலாக திறந்த வெளியில் தங்கி போராட்டம்

போலி ஆவணம் மூலம் 89 ஏக்கர் பத்திரபதிவை கண்டித்து தொடர் தர்ணா இரவு பகலாக திறந்த வெளியில் தங்கி போராட்டம்

ADDED : செப் 26, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
தேனி: தேனி ஒன்றியம் பூமலைக்குண்டு ஊராட்சியில் வருவாய் தரிசு நிலம் 89 ஏக்கரை போலி ஆவணங்கள் தயாரித்து கோவையை சேர்ந்த நிறுவனத்திற்குபத்திரப்பதிவு செய்த நில புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்டுத்தரக்கோரிஇரு நாட்களாக தர்ணா போராட்டத்தை தொடர்கின்றனர்.

இவ்வூராட்சியில் துணை மின் நிலையம் அருகே 89 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. 1955ல் 89 ஏக்கர் நிலம் ஊராட்சியில்உள்ள 4 சமூகத்தை சேர்ந்த 19 பேரின் பெயர்களில் ஊராட்சி வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது. 19 பேரில் 18 பேர் இறந்த நிலையில் பாப்பம்மாள் என்பவர் மட்டும் உள்ளார்.

இந்நிலையில் 1970 அமலான நில உச்சவரம்பு சட்டத்தின் படி பயன்பாட்டில் இல்லாததரிசு நிலங்கள் வகைப்படுத்தப்பட்டன. அதன்படி 18 பேரின் வாரிசுதாரர்கள் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து கோவையை சேர்ந்தநிறுவனத்திற்கு நில புரோக்கர்கள் விற்பனை செய்துள்ளதாக புகார் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தனியார் நிறுவனத்தின் பணிகளை தடுத்து நிறுத்தி நேற்றுமுன்தினம் முதல் 300க்கும் அதிகமானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவில் சமையல் செய்து அதே இடத்தில் தங்கினர். நிர்வாகிகள் பூமலைக்குண்டு கிராம சேவா சங்கம்' சார்பில்இன்று 300 மாணவர்கள் தர்ணாவில் பங்கேற்க உள்ளதாகவும், இங்குள்ளவர்களின் ரேஷன்கார்டுகள், ஆதார் அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பாப்பம்மாள் என்பவரின் மகள் கிருஷ்ணம்மாள் பெயரில் வீரபாண்டி போலீஸ்ஸ்டேஷன் புகார் அளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us