ADDED : ஜூன் 20, 2025 03:54 AM
தேனி: தேனி நகர வட்டார காங்கிரஸ் சார்பில் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் 55வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டன.
பொம்மையக்கவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா வழங்கும் விழாவிற்கு நகரத் தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஷாஜூதீன், பெத்தணசாமி, நகரதுணைத் தலைவர் முகமதுமீரான், நகரச் செயலாளர் சங்கர், நகர நிர்வாகிகள் பவுன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.