/உள்ளூர் செய்திகள்/தேனி/ தனியார் எடுத்த டிஜிட்டல் கிராப் சர்வேயில் குளறுபடி மீண்டும் கணக்கெடுப்பு பணி துவக்கம் தனியார் எடுத்த டிஜிட்டல் கிராப் சர்வேயில் குளறுபடி மீண்டும் கணக்கெடுப்பு பணி துவக்கம்
தனியார் எடுத்த டிஜிட்டல் கிராப் சர்வேயில் குளறுபடி மீண்டும் கணக்கெடுப்பு பணி துவக்கம்
தனியார் எடுத்த டிஜிட்டல் கிராப் சர்வேயில் குளறுபடி மீண்டும் கணக்கெடுப்பு பணி துவக்கம்
தனியார் எடுத்த டிஜிட்டல் கிராப் சர்வேயில் குளறுபடி மீண்டும் கணக்கெடுப்பு பணி துவக்கம்
ADDED : செப் 26, 2025 03:01 AM
தேனி:தமிழகத்தில் தனியார் மூலம் எடுக்கப்பட்ட 'டிஜிட்டல் கிராப்' சர்வே பணியில் புகைப்படம், தகவல்கள் தவறுதலாக பதிவேற்றி குளறுபடி நடந்துள்ளது. இதனால் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் மூலம் மீண்டும் கிராப் சர்வே துவங்கி உள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு சர்வே எண், சப் டிவிஷன் வாரியாக ஆடி, கார்த்திகை, கோடை பட்டங்களில் சாகுடி செய்யப்படும் பயிர்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சர்வே பதிவுகள் ஏதேனும் இயற்கை சீற்றத்தால் பயிர் சேதமடைந்தால் இழப்பீடு வழங்க பயன்படும் என கூறப்பட்டது. சர்வே பணிகள் அதற்காக வடிவமைக்கப்பட்ட தனி இணைய பக்கத்தில் பதிவேற்றபடுகிறது. கடந்தாண்டு ஆடிப்பட்ட சாகுபடி வி.ஏ. ஓ.,க்கள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டது. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்வே எடுக்க வில்லை. வேளாண், தோட்டக்கலை மாணவர்கள் மூலம் கார்த்திகை, கோடையில் சாகுபடி பயிர்கள் சர்வே எண் வாரிய கணக்கெடுக்கப்பட்டது. சர்வே பணியால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் 2025 ஆடி பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் தனியார் மூலம் ஆக., செப்., டிஜிட்டல் சர்வே செய்யப்பட்டது. இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. சர்வே பணியில் பங்கேற்றவர்கள் பயிர்கள், மற்ற தகவல்களை தவறாக பதிவேற்றியதும், பதிவேற்றிய புகைப்படங்கள் குறிப்பிட்ட நிலங்களில் எடுக்கப்படவில்லை என வேளாண் துறை ஆய்வில் கண்டறியப்பட்டது. சில மாவட்டங்களில் இந்த ஆய்வில் பதிவேற்றிய 70 சதவீத தகவல்களில் குளறுபடி இருப்பது உறுதியானது. குளறுபடியால் பலகோடி ரூபாய் வீணாகி உள்ளது. இதனால்மீண்டும் சர்வே பணிகளை வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், விதை சான்றளிப்பு துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகளில் தேவைபட்டால் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை இணைத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.