தேனி : தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் போதைப்பொருட்களுக்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. தேனி டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் நடந்தது.
ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் முன்னிலை வகித்தார். போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், சமூக தீமைகள் உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது. தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.