ADDED : அக் 11, 2025 04:45 AM
ஆண்டிபட்டி: கண்டமனூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் போலீசார் ரோந்து சென்றனர்.
எரதிமக்காள்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ரம்யா 40, என்பவர் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.15, ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஒக்கரைப்பட்டியில் உள்ள நாகலட்சுமி 68, ஓட்டலில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.6856 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த கண்டமனுார் போலீசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


