Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சீரமைக்காத பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

சீரமைக்காத பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

சீரமைக்காத பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

சீரமைக்காத பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

ADDED : செப் 30, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
மூணாறு: மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நகரில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் டி.எஸ்.பி. குடியிருப்பு உள்ளது. அப்பகுதியில் 2018 ஆகஸ்ட்டில் பெய்த கன மழையில் ரோட்டோரம் சேதமடைந்து மிகப்பெரிய குழி ஏற்பட்டது.

அதனை கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்துடன் கடந்து சென்று வந்தன. மிகவும் ஆபத்தான குழி என்பதால் தடுப்புகள் வைத்து எச்சரித்தனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உட்பட தினமும் நூற்றுக் கணக்கில் வாகனம் வந்து செல்லும் ரோட்டில் ஏற்பட்ட குழியை ஏழு ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கவில்லை.

அந்த பள்ளத்தில் தமிழக சுற்றுலா பஸ் நேற்று சிக்கியது. வேறு அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்பதால் பயணிகள் தப்பினர். அந்த வழியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us